#வேலூர் || சாதிக் பாஷா நகர் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அருகே பாலாற்றங்கரையை அடுத்து உள்ள நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள சாதிக் பாஷா நகர் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள 347 வீடுகளும் ஜேசிபி உதவியோடு இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

மேல்விஷாரம் அருகே பாலாற்று கரையோரம் சாதிக் பாஷா நகர் என்ற குடியிருப்பு பகுதிஇல் சுமார்  347 க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதி நீர்பிடிப்பு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால், பாலாற்றில் வெள்ளம் ஏற்படும்போது பாதிக்கப்படுகிறது. 

இதனால் இந்த குடியிருப்புகளை முழுமையாக இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, குடியிருப்புகளை முழுமையாக அகற்றும் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தொடங்கி வருகிறது.

காலை முதல் ஜேசிபி உதவியோடு காலி செய்யப்பட்ட வீடுகள் ஒவ்வொன்றாக இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் இடிக்கப்பட்ட வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து அவர்களுக்கு வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ranipet melvisharam land issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->