#BigBreaking || அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சற்று முன் கைது.!  - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சற்று முன்பு தமிழக காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அன்று, ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை அரை நிர்வாணமாக இழுத்து சென்ற சம்பவம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது, தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சட்டவிரோதமாக கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்நிலையில்,  திமுகவை சேர்ந்த நரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கையில், "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டத்தை தன் கையில் கையில் எடுத்துக்கொண்டு, திமுக நிர்வாகியின் சட்டையை கழற்றி அவமானப்படுத்தி உள்ளார். இதனை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும்  கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள்" என்று மு க ஸ்டாலின் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rayapuram incident jeyakumar arrest


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->