ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க பரிந்துரை.. தடுத்தது யார்.. வெளியான பரபரப்பு அறிக்கை.!
Recommendation for Jayalalitha's treatment abroad report Released
கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்பாராத வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் காலமானார். அவர் மரணத்தில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள், அதிமுகவின் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையானது இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலை, எந்த விதமான சிகிச்சை மற்றும் எதிர்பாராமல் நடந்த மரணம் உட்பட அனைத்து விவரங்களும் அந்த அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைப்படி சசிகலா, கே.எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 4 பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதில், கடந்த 2012 இல் மீண்டும் இணைந்த ஜெயலலிதா சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பிந்தைய நிகழ்வுகள் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தான உண்மையை வெளியிட சசிகலா தடுத்துள்ளார்.
வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க தயார் என ரிச்சர் பீலே சொன்ன பிறகும், அதுபற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆஞ்சியோ செய்ய ஜெயலலிதாவை மருத்துவர் ஷமீன் ஷர்மா சம்மதிக்க வைத்தும், சிகிச்சை நடக்கவில்லை ஆறுமுகசாமி ஆணையம்
மேலும் அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளார். ஆனால் அது நடக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவ குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இதனையடுத்து சசிகலாவை முக்கிய குற்றவாளியாக ஆறுமுக ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
English Summary
Recommendation for Jayalalitha's treatment abroad report Released