#சற்றுமுன் | கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் போலி பத்திரப் பதிவுகளை சார் பதிவாளர்களே ரத்து செய்வதற்காக, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் போலி பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

இதன்படி, போலி பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறை தலைவரிடம் இருந்து, சார் பதிவாளருக்கு வழங்க வகை செய்கிறது. 

மோசடி ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு, நில அபகரிப்பாளர்களிடமிருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்று தர வழிவகை செய்கிறது.

மேலும், பொய்யான பத்திரம், நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடை செய்யப்பட்ட பத்திரங்கள், அரசால் இணைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை பதிவு செய்ய, பதிவு அலுவலர் மறுக்க வேண்டும். 

பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பதிவுத் துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

பதிவு அலுவலர் முறைகேடான பதிவுகளை செய்தால், பதிவு அலுவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டத் திருத்தத்துக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழக பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Registration tamilnadu DraupadiMurmu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->