புது எம்.பி. க்களில் 504 பேர் கோடீஸ்வரர்கள் - வெளியானது ஆய்வு தகவல்! - Seithipunal
Seithipunal



நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் நடந்து, தேர்தல் முடிவுகளும் வெளியாகி விட்டன. மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில் 'தி அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்மர்ஸ்' அமைப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆய்வில் தற்போதைய மக்களவையில் 543 க்கு 504 பேர் கோடீஸ்வரர்கள் என்று தெரிய வந்துள்ளது.

அதில் ஆந்திராவின் குண்டூர் தொகுதியில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் சந்திர சேகர் ரூ. 5 ஆயிரத்து 705 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து தெலங்கானாவைச் சேர்ந்த விஷ்வேஸ்வர் 4 ஆயிரத்து 568 கோடி சொத்துக்களுடன் இரண்டாமிடத்திலும், தொழிலதிபர் நவீன் ஜிண்டால் 1241 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் 240 பாஜக எம். பி. க்களின் ஒட்டுமொத்த சராசரி சொத்துமதிப்பு 50.4 கொடிகளும், 99 காங்கிரஸ் எம். பி. க்களின் ஒட்டுமொத்த சராசரி சொத்துமதிப்பு 22.93 கோடிகளும், 22 திமுக எம். பி. க்களின் ஒட்டுமொத்த சராசரி சொத்து மதிப்பு 31.22 கோடிகளாகவும் உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Research Paper of Loksabha New MPs Personal Background


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->