மணிப்பூர் விவகாரம் || மீண்டும் அமைதி திரும்ப மக்களவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்.!!
Resolution made regarding Manipur issue was passed
நாடாளுமன்றம் மழைக்கால கூட தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் கலவர விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வந்தன. இதனை அடுத்து நாடாளுமன்ற வீதி 267 இன் படி மணிப்பூர் கலவரம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இதனை நாடாளுமன்றம் ஏற்காததால் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன. நீண்ட இழுபறிக்கு பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை இல்லா தீர்மானத்தை விவாதத்திற்கு ஏற்றுக் கொண்டார்.
இது கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நீடித்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்ததற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்தார்.
காரசாரமாக நடைபெற்ற இன்றைய விவாதத்தின் போது திமுக சார்பில் கனிமொழி பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பதில் அளித்தார்.
மேலும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை திரும்ப கொண்டு வர அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
குறிப்பாக மணிப்பூரில் அனைத்து பிரிவு மக்களும் இணைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
Resolution made regarding Manipur issue was passed