பெரும் சர்ச்சை.. புதிய நாடாளுமன்றத்தை "சவப்பெட்டியுடன் ஒப்பிட்ட" அரசியல் கட்சி.. பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை திறந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியையும் பாரதிய ஜனதா கட்சியும் பலர் புகழ்ந்தும், பாராட்டியும் வருகின்றனர். இந்த நிலையில் 19 எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி திரௌபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க கோரி திறப்பு விழாவை புறக்கணித்தன. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வடிவமைப்பை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அக்கட்சி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் சவப்பெட்டியின் படத்தை ஒப்பிட்டு "இது என்ன?" புதிய நாடாளுமன்ற கட்டிடம் சவப்பெட்டி போல் காட்சியளிப்பதை போன்று பொருள்படும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய பாஜக தலைவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவை சேர்ந்த சுஷில் மோடி, ஆர்ஜேடியை கடுமையாக சாடி தோடு தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதேபோன்று பாஜக தலைவர் துஷ்யந்த் கவுதம் கூறுகையில் "இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இன்று சவப்பெட்டியுடன் ஒப்பிடுகிறார்கள், பழைய பாராளுமன்றத்தை பூஜ்ஜியத்துடன் ஒப்பிடுகிறார்களா? நாங்கள் முன்பு பூஜ்ஜியத்தில் அமர்ந்திருந்தோம்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

இதற்கு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்டிடத்தை அவமரியாதை செய்வதாக அர்த்தமல்ல, ஜனநாயகம் புதைக்கப்படுகிறது என்று மட்டுமே கூற வேண்டும் என்று கூறியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் சக்தி சிங் யாதவ் கூறுகையில் "எங்கள் ட்வீட்டில் உள்ள சவப்பெட்டி புதைக்கப்பட்டது ஜனநாயகத்தின் பிரதிநிதித்துவம். இதை நாடு ஏற்காது. பாராளுமன்றம் ஜனநாயகத்தின் கோவில், அது விவாதம் நடத்தும் இடம். பிரதமர் மோடி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார். ஜனநாயகத்தின் மரணத்தை மோடி உறுதி செய்துவிட்டார் என சவப்பெட்டி ஒட்டப்பட்டுள்ளது" என விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RJD compared the new Parliament to a coffin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->