சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி நாள் மிகவும் முக்கியமானது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.!
RNRavi say about GST day
கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி (GST) திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு இதேநாள் (ஜூலை 1-ஆம் தேதி) அறிமுகப்படுத்தியது. அதன்படி. 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது கூடுதலாக செஸ் வரி விதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி முறை 5 ஆண்டுகளை நிறைவுசெய்து, இன்று 6-ஆவது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது. இதனை நாடு முழுவதும் ஜிஎஸ்டி நாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஜிஎஸ்டி நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில்,
"நம் நாட்டின் சுதந்திர நாள், குடியரசு நாளைவிட, மிக முக்கியமான நாள் ஜிஎஸ்டி நாள். பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்ட பிறகு மிக முக்கியமான நாளாக 5 ஆவது ஜிஎஸ்டி நாள் பார்க்கப்படுகிறது.
இந்தியா மிக நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே பிறந்துவிட்டது. பல மாநிலமாகப் பிரிந்த போதிலும், நம் நாடு ஒரு அகண்ட பாரதம். பாரதம் என்பது ஒன்றே. பல மொழி, பல கலாச்சாரம் அதுவே பாரதத்தின் அழகு. விவேகனந்தரும், பாரதியாரும் அகண்ட பாரதம் குறித்து தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி.,யால் 'ஒரே நாடு, ஒரே வரி' என்கின்ற ஒரே நாடு ஒன்றிணைகிறது" என்று ஆளுநர் பேசினார்.