கோட்சேவை பாராட்டிய என்.ஐ.டி. பெண் பேராசிரியர்; இயக்குனராக பதவி உயர்வு..! கேரளா அரசியலில் சிக்கல்..! - Seithipunal
Seithipunal


காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை பாராட்டிய கேரளாவை சேர்ந்த என்.ஐ.டி. பெண் பேராசிரியருக்கு  என்.ஐ.டி.யின் இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு  காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கேரள மாநிலம் கோழிக்கோடு என்.ஐ.டி.யில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷாயிஜா ஆண்டவன். இவர் கடந்தாண்டு பிப்ரவரியில் சமூக வலைதளத்தில் கோட்சே படத்துடன், இந்தியாவை காப்பாற்றிய நாதுராம் கோட்சேவை நினைத்து பெருமை படுகிறேன். பாரத மக்களின் ஹீரோ, நாதுராம் கோட்சே என பாராட்டி பதிவேற்றினார். இதனால்,இவர் கடும் விமசனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளானார்.

அத்துடன், இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குபதியப்பட்டு, குன்னமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றார்.

இந்நிலையில், தற்போது, ஷாயிஜாவுக்கு கோழிக்கோடு என்.ஐ.டி.யின் திட்டம் மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கேரள காங்கிரஸ், கம்யூ.க்கள் ,தயூப் எனப்படும் ஜனநாயக வாலிபர் சங்கம், எஸ்.எப். ஐ., எனப்படும் இந்திய மாணவர் சங்கம் ஆகியன கடும் கண்டனம் தெரிவித்தன.

தற்போதைய இயக்குனராக ப்ரியா சந்திரன் எதிர்வரும் ஏப்ரலில் ஒய்வு பெறவுள்ளார். இதனால், ஷாயிஜா ஆண்டவன் நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NIT female professor who praised Godse promoted to director Trouble in Kerala politics


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->