கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் செயலில் இறங்கிய ஆர்.எஸ்.பாரதி.! கொந்தளிக்கும் காங்கிரஸார்.!  - Seithipunal
Seithipunal


பொது நிகழ்ச்சி ஒன்றில் திமுக ஆர்.எஸ்.பாரதி பெருந்தலைவர் காமராஜர் குறித்து இழிவாக பேசிய நிலையில் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

திமுக ஆர் எஸ் பாரதி பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டர். அப்பொழுது, " திமுகவினரான நம்மை அழிக்க நினைத்தவர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள் என்பதை நான் பட்டியலிட்டுக் கூற விரும்பவில்லை. 

பெருந்தலைவர் காமராஜர் திராவிட திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்று பேசினார். அவருக்கு கல்லறை கட்டியதே நாம்தான்." என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதற்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதில், "பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திய இதுபோன்ற திமுகவின் அநாகரிகமான, பொய்யான பேச்சு கண்டிக்கத்தக்கது. பெருந்தலைவர் காமராஜர் என்றும் வெட்டுவேன் என அரசியலில் பேசியதே இல்லை. அவர் புகழ் என்றும் வாழும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs barathi Damages Kamarajar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->