10 லட்சம் கோடி ஊழல்! நேரடியாக கோடி கணக்கில் அண்ணாமலை வாங்கினார் - ஆர்எஸ் பாரதி பகீர் பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்தாவது, "அண்ணாமலை வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பார்கள்.

அநேகமாக அண்ணாமலை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் பாஜகவிற்காக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு பதிலாக, நீதிமன்றங்களுக்கு தான் சென்று வருவார் என்று நினைக்கிறேன்.

அதானி விவகாரத்தில் 10 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி எழுப்பினர். இதற்காகவே பாராளுமன்றத்தில் இரு அவைகளையும் கூட்டாமல் ஆளும் பாஜக தவிர்த்து வந்தது.

அதுமட்டுமல்லாமல் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஷெல் கம்பெனிக்கு பிரதமர் மோடி போட்டார் என்று பகிரங்கமாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அது பற்றியும் பதில் சொல்லவில்லை.

ஆருத்ரா நிறுவனத்தில் பணத்தை இழந்து விட்டு வயிற்றெரிச்சலுடன் நேற்று பாஜகவின் கமலாயத்திற்கு சென்று போராட்டம் செய்ததை ஊடகங்கள் நேற்று காண்பித்தனர். அந்த ஆருத்ரா ஊழல் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய். அதில் பல கோடி ரூபாயை அண்ணாமலை நேரடியாக பெற்று இருக்கிறார்.

84 கோடி ரூபாயை நேரடியாக இவருக்கும், இவருடைய சகாக்களுக்கும் கொடுத்ததாக அவர் கட்சியில் இருப்பவர்கள் சொல்லி உள்ளனர்.

இதனை மறைப்பதற்கு இப்படி ஒரு நாடகத்தை அண்ணாமலை நடத்தி இருக்கிறார். அண்ணாமலைக்கு நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.

ரஃபேல் வாட்ச்க்கு உண்டான ஆவணம் கூட அண்ணாமலை கொடுத்தது போர்ஜரி தான். அதிலும் உண்மை இல்லை" என்று ஆர்எஸ் பாரதி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RS Bharati Say About Annamalai And Arutra Scam Adani scam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->