#BigBreaking | தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம் - காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அதிரடி! - Seithipunal
Seithipunal


சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. 

இந்த கலவரத்திற்கு காரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு எதிராக செயல்படும் எதிர் அணியை ரூபி மனோகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட்டது.

இந்த சமத்துவம் குறித்து காங்கிரஸ் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்திவந்த நிலையில், ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்துள்ளார்.

சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ரூபி மனோகரன் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றும், அவர் உரிய பதில் அளித்த பிறகு அவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ruby manoharan congress mla


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->