சேலம் அதிமுக பிரமுகர் கொலை : கஞ்சா- லாட்டரி மாபியா தொடர்பா? போலீசார் தீவிர விசாரணை..!! - Seithipunal
Seithipunal



சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளராகவும், முன்னாள் மண்டலக் குழுத் தலைவராகவும் இருந்தவர் சண்முகம் (62). இவர் சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவில் வசித்து வந்தார். இவரது கட்சி அலுவலகம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டில் உள்ளது.

இந்நிலையில் இவர் நேற்று (புதன்கிழமை) இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது அவர் சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் சென்ற பொது, இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் சண்முகத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து சண்முகத்தின் உறவினர்கள் தாதகாப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு தொடர்ந்து விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்காக ஐந்து தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட படுகொலை என்று தெரிய வந்துள்ளது. சண்முகம் வீட்டிற்கு செல்லும் நேரத்தை சில நாட்களாக நோட்டம் விட்டு சமயம் பார்த்து இந்த கொலையை நடத்தியுள்ளதாக தெரிகிறது. 

 

முன்னதாக சண்முகம் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ள நபர்களையும், சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வோரையும் தெடர்ந்து பலமுறை கண்டித்து வந்தததோடு போலீசிலும் புகார் கொடுத்துள்ளாதாகத் தெரிகிறது. 

இதையடுத்து இந்த கஞ்சா மற்றும் லாட்டரி கும்பலுக்கு இந்த கொலையில் தொடர்புள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சேலத்தில் அந்த சட்ட விரோத லாட்டரி கடைகள் இன்று மூடி இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem District ADMK Ex Leader Murder Police Thoroughly Investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->