திருட்டுவழக்கில் மனைவியுடன் கைதான குற்றவாளி மர்ம மரணம்., போலீசாரை கைது செய்யக்கோரி விசிக ஆர்ப்பாட்டம்.!
SALEM PRABAKARAN DEAD ISSUE
சேலம் அருகே போலீசார் தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்ததாக, விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர் பிரபாகரன். மாற்றுத்திறனாளியான இவரும் இவருடைய மனைவி ஹம்சலா ஆகிய இருவரையும் ஒரு திருட்டு வழக்கில் சேந்தமங்கலம் காவல் நிலைய போலீஸார் கடந்த 10ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 006.png)
இதனை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி பிரபாகரன் நாமக்கல் சிறையிலும், ஹம்சலா சேலம் மத்திய சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென பிரபாகரனின் உடல் நிலை மோசமானதாகும், இதனால் அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரபாகரன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இதனையறிந்த பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர்கள், போலீசார் தாக்கியதால் தான் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மேலும் பிரபாகரனின் உடலை வாங்க மறுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பிரபாகரன் உயிரிழப்புக்கு காரணமான சேந்தமங்கலம் காவல் நிலைய போலீசார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கொலை வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் ஆவேசமாக குரல் எழுப்பினர்.
![](https://img.seithipunal.com/media/gaesgyseahy.png)
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகர காவல் உதவி ஆணையாளர் வெங்கடேசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் மனு அளித்து விட்டு சம்பவ இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
English Summary
SALEM PRABAKARAN DEAD ISSUE