கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் - பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், மஞ்சக்கொல்லை கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வன்முறை கும்பலால் கொடூரமாக கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பாமக தொண்டர் செல்லத்துரையின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதற்காக, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சாதி கலவரத்தை தூண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி இன்று தமிழகம் முழுவதும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாமக சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக்கோரி சேலம் மாநகரம் காவல் உதவி ஆணையாளர், ஆய்வாளரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசிய சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கக்கோரி சேலம் மாநகரம் உயர்திரு. காவல் உதவி ஆணையாளர்,ஆய்வாளர் அவர்களையும் சந்தித்து மனு வழங்கினோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem West PMK MLA Arul Complaint against VCK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->