மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள சமாஜ்வாதி கட்சி!!
Samajwadi Party has emerged as the third largest party
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியில் உத்தரபிரதேசத்தில் 62 தொகுதிகளில் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வென்றது மூலம் சமாஜ்வாஜ் கட்சி மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நிறைவடைந்தது.
இந்தியாவில் 18-வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி உள்ளது. உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ள நிலையில் பாஜக 33 இடங்களை மற்றுமே கைப்பற்றி உள்ளது.
உத்தர பிரதேசம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி முதல் இரண்டு சுற்றுக்கு பின்னடைவை சந்தித்தார். அதன் பின்னர் முன்னிலை வகித்து வந்த பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 62 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 37 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களவை தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது
English Summary
Samajwadi Party has emerged as the third largest party