#JustIn : "இது தான் சரியான நேரம்.. என் இலக்கை நெருங்கிட்டேன்." சசிகலா பரபரப்பு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக பிரமுகரும், அமமுக செயலாளருமான சசிகலா அதிமுக ஒருங்கிணையும் நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். 

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்க இருப்பதாக தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களான புரட்சித்தலைவர் மற்றும் அம்மா இருவருமே திமுக ஒரு தீய சக்தி என்றும் அதை அழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்கள். 

அதையே தான் நானும் இப்போது கூறுகிறேன். அதிமுகவை ஒருங்கிணைக்க கூடிய பணிகளில் பல நாட்களாக ஈடுபட்டு வருகின்றேன். இப்போது எனது இலக்கை நான் நெருங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். 

தனித்தனியாக அதிமுகவினர் பிரிந்து கிடப்பது நல்லதல்ல. ஆரம்ப காலத்தில் இருந்து இதை தான் நான் வற்புறுத்துகிறேன். அதிமுக ஒன்றிணை கூடிய சூழ்நிலை வந்துவிட்டது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. பொறுத்திருந்து பாருங்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala about her aim For admk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->