ஈபிஎஸ் தலைமையில் சசிகலாவும், தினகரனும் அதிமுகவில் இணைப்பு.. அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா.! - Seithipunal
Seithipunal


சசிகலாவும், தினகரனும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அதிமுகவில் அவர்களை இணைப்பது குறித்து அதிமுக தலைமை ஆலோசனை செய்யும் என அதிமுக  எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா சமீபத்தில் அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை தினகரன் மற்றும் சசிகலா ஏற்றுக் கொண்டால் அவர்களை கட்சியில் இணைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சசிகலாவையும், தினகரனையும் அமுகவில் இணைக்க ஓபிஎஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் இதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala and Dinakaran join AIADMK under the leadership of EPS AIADMK MLA Rajanchellappa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->