2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக ஆட்சிதான்.. காங்கிரஸ் எம்பி பேச்சு.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் கோழிக்கோடு பகுதியில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது, "2019 மக்களவை தேர்தல் நடைபெற்ற போது குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாஜகவானது அனைத்து மாநிலங்களையும் வெற்றி பெற்றது. மேலும் மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் அதிகப்படியான இடங்களை பாஜக கைப்பற்றியது. மேற்கு வங்க மாநிலத்தில் கூட 18 தொகுதிகளில் பாஜக வென்றது. 

இருப்பினும், 2024 மக்களவைத் தோ்தலின் போது பாஜக இதே அளவு வெற்றி பெறுமா என்றால் இல்லை. இப்பொழுது, இருப்பதைவிட 50 இடங்கள் வரை பாஜகவுக்கு குறைவாக தான் கிடைக்கும். ஆகவே, பாஜவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதுபோல, பாஜக இழக்கவுள்ள தொகுதிகள் எதிா்க்கட்சிகளுடை பக்கம் வரும். ஆகவே, எதிர்க்கட்சிகளின் பலத்தை அது கூட்டும்.

பாலக்கோடு துள்ளிய தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதல் உள்ளிட்டவை பாராளுமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக மாறி கை கொடுத்தது. அதுபோல 2024 இல் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலிலும் பாஜக தான் ஆதிக்கம் செலுத்தும். 2024 பாராளுமன்ற தோ்தலில் பாஜகவானது 250தொகுதிகளிலும், பிற கட்சிகள் 290 இடங்களிலும் வெற்றி பெறுமெனில் நிலைமை எவ்வாறு மாறும் என சொல்ல முடியாது." தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasitharur speech about 2024 parliament election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->