கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது போல தற்போது வெற்றி பெற முடியாது - சசிதரூர்.!
Sasitharur speech about BJP and 2024 parliament election
2024 நாடாளுமன்றத் தேர்தல் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி கரூர் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது போல தற்போது வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக இருப்பதால் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஆதரவு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக 31 சதவீதம் மற்றும் 37 வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் தனித்தனியாக இருந்ததால் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அப்போதுதான் பாஜகவின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மீதான அதிருப்தி மக்களிடையே இருப்பதால் அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
English Summary
Sasitharur speech about BJP and 2024 parliament election