கையாலாகாத திமுக அரசின் கட்டுக்கதைகள்! சாத்தனூர் அணை விவகாரத்தில் பாமக அருள் இரத்தினம் ஆவேசம்! - Seithipunal
Seithipunal


சாத்தனூர் அணையை "ஏன் திறந்தார்கள்" என்பது கேள்வி இல்லை. "பெருமழையை கணித்து எதற்காக முன்கூட்டியே அணை நீரை வடியவைக்கவில்லை? எதற்காக முன்கூட்டியே மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை?" என்பதுதான்.

நள்ளிரவு 2.45 மணிக்கு தாசில்தாருக்கு கடிதம் எழுதிவிட்டு, அப்போதே 1.80 லட்சம் கன அடி தண்ணீரை திறப்பதுதான் 'திமுக அரசின் எச்சரிக்கை லட்சணமா?'சாத்தனூர் உண்மைகளை கீழே காண்க:

"நள்ளிரவில் திறக்கப்பட்ட சாத்தனூர் அணை: கையாலாகாத திமுக அரசின் கட்டுக்கதைகள்!"

முன்னறிவிப்பின்றி 1.68 லட்சம் கன அடி நீரை நள்ளிரவில் திறந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களை பெருவெள்ளத்தில் முழ்கடித்தது திமுக அரசு! 

இந்த படுபாதகச் செயலை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் - ஐந்து முறை வெள்ள எச்சரிக்கை வெளியிட்டதாக திமுக அரசு சப்பைக்கட்டு செய்தியை வெளியிட்டுள்ளது. (இதில் முதல் எச்சரிக்கை கடந்த அக்டோபர் மாதமே வெளியானதாக கூறியுள்ளனர்.)

இந்த விளக்கத்திலேயே திமுக அரசின் கையாலாகாத்தனம் தான் தென்பெண்ணை பெருவெள்ளத்துக்கான காரணம் என்பது தெளிவாக உள்ளது!

ஒரு நல்ல அரசு என்பது மழை அளவை முன்கூட்டியே கணித்து, படிப்படியாக அணை நீரை வெளியேற்றி இருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் 1 காலை 15,000 கன அடி நீரை வெளியேற்றியவர்கள், இரவு 10 மணிக்கு அதனை 30,000 கன அடியாக அதிகரித்துள்ளனர். 

ஆனால், நள்ளிரவு 2.45 மணிக்கு திடீரென 1,68,000 கன அடி நீரை வெளியேற்றியுள்ளது திமுக அரசு!

அதாவது, 14 மணி நேர இடைவெளியில், வினாடிக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றத்தை 30,000 கன அடியாக அதிகரித்தவர்கள், அடுத்த 5 மணி நேரத்தில், நள்ளிரவில், திடீரென 1,68,000 கன அடி நீரை வெளியேற்றியுள்ளனர்.

01.12.2024

காலை 8.00 மணி = 15,000 கனஅடி
காலை 11.30 மணி = 20,000 கனஅடி
இரவு 10.00 மணி = 30,000 கனஅடி

நள்ளிரவு 2.45 மணி (2.12.2024) 1,68,000 கன அடி

அரசின் நள்ளிரவு செய்திக் குறிப்பில், "சாத்தனூர் அணையின் நீர் மட்டம் எதிர்பாராத வகையில் அதிகரித்ததாக" குறிப்பிட்டுள்ளார்கள் (Unexpected manner). இதுபோன்ற விளக்கத்தை சாதாரண மனிதர்கள் சொல்லலாம். ஒரு அரசாங்கம் சொல்லக்கூடாது.

நீர்வளத்துறை, பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறை என பல்வேறு துறைகளை வைத்து கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு நிர்வாகம் இதுபோன்று 'எதிர்பாராத வகையில்' நடந்ததாகச் சொல்வது வெட்கக் கேடு. இது திமுக அரசின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு! 

தி இந்து தமிழ் வெளியிட்டுள்ள செய்தி கீழே:

//அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதாக, அதிகாலை 4.15 மணியளவில் ஊடகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு, நீர்வளத் துறை எச்சரிக்கை சென்றடையவில்லை.

எச்சரிக்கை விடுக்கும் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே, அணையில் இருந்து 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை சற்றும் எதிர்பாராத 4 மாவட்ட கரையோரங்களில் வசிக்கும் மக்கள் திணறினர். உயிரை பாதுகாத்து கொள்ள, வீடுகளில் இருந்து வெளியேறியவர்கள், தங்களது உடமைகளை பாதுகாக்க முடியவில்லை. 

வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் மூழ்கியது. கால்நடைகள் உயிரிழந்தன. கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.//

ஆக மொத்தம், நள்ளிரவு 2.45 மணிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திடீரென வெளியேற்றிவிட்டு, அதனை அதிகாலை 4.15 மணிக்கு ஊடகங்களுக்கு செய்தியாக அனுப்பிவிட்டு - திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களுக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக திமுக உபிஸ் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

வெட்கம் கெட்ட திராவிடமாடல்!" என்று அருள் இரத்தினம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Saththanur Dam Flood issue DMK Govt MK Stalin PMK Arul R


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->