சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!
savukku sankar case cbcid
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்து சேதப்படுத்திய விவகாரம் – வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சூறையாடல் சம்பவம் தொடர்பாக துணை காவல் தளபதி (DGP) சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், வழக்கு சிபிசிஐடிக்கு (CBCID) மாற்றப்பட்டுள்ளது.
இன்று (24.03.2025) காலை 9.45 மணியளவில், சுமார் 20 பேர் கொண்ட குழு சவுக்கு சங்கரின் கில்பாக்கம் இல்லத்திற்குள் புகுந்து, அவரது வீட்டை சேதப்படுத்தி, மலம் மற்றும் கழிவுநீர் வீசியதாக அவரின் தாயார் புகார் அளித்தார்..
இந்த சம்பவம் குறித்து சவுக்கு சங்கர் தரப்பில், G-3 கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் முறையான புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், C.S.R. No.118/2025 வழங்கி, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
இதற்கிடையில், சவுக்கு சங்கர், சென்னை காவல்துறை மற்றும் காவல் ஆணையரை குறிவைத்து கருத்து தெரிவித்ததையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர், வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க, வேறு அமைப்பிற்கு மாற்ற கோரிக்கை வைத்தார்.
இதனை அடுத்து, DGP சங்கர் ஜிவால், G-3 கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை CBCID-க்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.
English Summary
savukku sankar case cbcid