இன்று இரவே சவுக்கு சங்கர் கைது செய்யப்படுகிறார்! வெளியான பரபரப்பு தகவல்!
Savukku Sankar Say may be arrested today Night
தான் இன்று இரவே கைது செய்யப்பட உள்ளதாக சவுக்கு சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அடுக்கடுக்கான ஊழல் புகார் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த சங்கர் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், செந்தில் பாலாஜி சகோதரர் சகோதரர் வீட்டில் சோதனை மேற்கொள்ள முயன்ற போது வருமானவரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் தாக்கியது சம்பந்தமாக பல்வேறு பேட்டிகளில், தமிழக போலிசார் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
இது சம்பந்தமான புகாரின் பேரில் இன்று இரவே தன்னை போலீசார் கைது செய்ய உள்ளதாக, சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த பதிவில், "கரூர் எஸ்பி சுந்தரவதனம் ஐபிஎஸ் புகாரின் பேரில், நான் (சவுக்கு சங்கர்) இன்று இரவு கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் நடந்த சோதனையின் போது, வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக, ஒரு சில நேர்காணல்களில் நான் அவரைப் பற்றி அவதூறாகப் பேசியதாக எஸ்பி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவினரின் தாக்குதலுக்கு சுந்தரவதனம் தீவிரமாக உதவினார், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு அளித்தார் மற்றும் உண்மையான குற்றவாளிகளை இன்றுவரை கைது செய்யத் தவறிவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களை இரண்டு நாட்களில் ஜாமீனில் வெளியே வர சுந்தரவதனம் அனுமதித்தார்.
இந்த வழக்கு சிபிஐக்கு சென்றால், இதே குற்றப்பத்திரிகையில் சுந்தரவதனம் ஐபிஎஸ் குற்றவாளியாக சேர்க்கப்படுவார்.
ஏற்கனவே ஜாமீன் மனுவை எதிர்த்து ஐடி அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது" என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
English Summary
Savukku Sankar Say may be arrested today Night