ஏன் இப்படி நடந்துக்குறிங்க? சவுக்கு சங்கர் வழக்கில் சிக்கிய தமிழக அரசு! சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்!
Savukku Shankar SC Case TNGovt DMK MkStalin
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக, அவமரியாதையாக பேசியதாகவும், கஞ்சா வைத்திருந்ததாகவும் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
மேலும் , தமிழகம் முழுவதும் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டு இருந்த வழக்குகளில் அடுத்தடுத்து ஜாமின் கிடைக்க, அவர் மீதான குண்டசும் ரத்து செய்யப்பட்டு விரைவில் ஜாமீனில் வெளியே வருவதற்கு உண்டான வாய்ப்பு இருந்தது.
இந்த நிலையில், மீண்டும் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பழிவாங்கும் நோக்கில் மீன்றும் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போடப்பட்டு இருப்பதை தெரிவித்தார்.
இதற்கு உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ் போடப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி, சவுக்கு சங்கர் மீது மேல் நடவடிக்கை கூடாது என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "நாங்கள் நிவாரணம் கொடுக்கிறோம் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளி வருகிறார். பிறகு மீண்டும் நீங்கள் அவரை வேறு ஒரு வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைக்கிறீர்கள்.
ஏன் அவர் பின்னால் தமிழக அரசு சுற்றிக்கொண்டு இருக்கிறது? ஏன் நீங்கள் இதுபோன்று நடந்து கொள்கிறீர்கள்" என தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட17 மேற்பட்ட வழக்குகளின் FIR ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையை, சவுக்கு சங்கரை குண்டாஸ் வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீதான விசாரணையோடு ஒன்றாக வரும் 27 ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Savukku Shankar SC Case TNGovt DMK MkStalin