சவுக்கு சங்கரிடம் சிக்கிய ஆர்.எஸ் பாரதி! வழக்கு தொடர கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!
Savukshankar filed petition to file criminal contempt case against RS Bharati
திமுக அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததோடு அதன் மீது பதில் அளிக்குமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை, திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக நீதிமன்றத்திற்கு தாமாக முன்வந்து விசாரணை செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் பழி வாங்கும் நோக்கத்தோடு அது இருக்கக் கூடாது. நீதிபதியின் செயல் அவ்வாறு அமைந்துள்ளது என விமர்சனம் செய்திருந்தார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தையும் நீதிபதியும் அவமதித்துவிட்டதாக வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு முறையிட்டார். அதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.
நீதிபதியாக பதவி ஏற்றதற்கு சட்டப்படியான கடமையை நான் செய்கிறேன். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் சொல்லும் கருத்துக்களால் நான் கவலைப்படவில்லை; கருத்திலும் கொள்ளவில்லை. நான் நிலை தவறினால் நீதிபதியாக இருக்கும் திறமையை இழந்தவனாகி விடுவேன்" என கூறி வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்தார்.
இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு எதிராக கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்து குறிப்பு வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சனம் செய்தது நீதித்துறை அமைதிக்கும் செயலாகும். எனவே திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.
English Summary
Savukshankar filed petition to file criminal contempt case against RS Bharati