ஓபிஎஸ் சொத்துகுவிப்பு வழக்கு: இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!
SC order OPS case
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
2001 - 2006ல் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் குவித்ததாக, ஓ பன்னீர்செல்வம் மற்றும் சிலரின் மீது திமுக ஆட்சி காலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை அ.தி.மு.க., ஆட்சியமைந்த போது, திரும்பப்பெற்றுக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, ஓ.பிஎஸ்., உள்ளிட்ட அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து, சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிவகங்கை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்., மேல்முறையீடு செய்த நிலையில், ஓ.பி.எஸ்.,க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதுகுறித்து நான்கு வாரத்தில் பதிலளிக்க எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.