"ஒரு விமானம் கூட இல்ல., இதுக்கு 54 விமான நிலையம்" கடுப்பான சீமான்.!
Seeman about Budget 2023
பிரதமர் மோடி தலைமையிலான கடைசி பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், "மக்களை வஞ்சிக்கும் விதமாக இந்த பட்ஜெட் இருக்கிறது. தனிநபர்களுக்கான வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், இது புதிய வழிமுறைக்கு மட்டும்தான் பொருந்தும் என்று தெரிவித்து இருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.
தங்கத்தின் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது. இனி ஏழைகளுக்கு தங்கம் வாங்குவது வெறும் பகல் கனவாகி விடும். மேலும், இது தங்க கடத்தலுக்கும் வழிவகுக்கும். மின்னணு மற்றும் கைபேசி இயந்திரங்களுக்கான சுங்க வரியை குறைத்து விட்டு எரிபொருள்களின் வரிகளை குறைக்காமல் தவிர்த்து விட்டுள்ளனர்.
இது ஏழைகளுக்கான நிதிநிலை அறிக்கை இல்லை. முழுக்க முழுக்க பெரிய முதலாளிகளுக்கான நிதிநிலை அறிக்கை அரசுக்கு சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத நிலையில், 54 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் எனும் அறிவிப்பு வேடிக்கையாக இருக்கிறது. விமான நிலையங்களை கட்டி அதை தனியாருக்கு கொடுக்க அதையும் தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைத்து விடலாமே. மத்திய அரசின் இந்த பட்ஜெட் எந்த வளர்ச்சிக்கும் உதவாத மக்களை வஞ்சிக்கும் பட்ஜெட்." என்று தெரிவித்துள்ளார்.