தேச ஒற்றுமை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்கா.!! - சீமான் ஆவேசம்.!! - Seithipunal
Seithipunal


மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "கலவரம் செய்து ஆட்சிக்கு வந்தவர்கள் பாஜகவினர் . அதே அரசியலை மணிப்பூரிலும் செய்கிறது. மணிப்பூர் கலவரம் 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் அவமானம். வலி தாங்கிய இனத்தின் பிள்ளைகள் நாங்கள் அதன் அடிப்படையில் மணிப்பூர் மக்களுக்காக போராடுகிறோம்.

பாஜகவினர் பொதுமக்களை தேர்தலுக்கான ஒரு வாக்காக தான் பார்க்கிறார்களே தவிர ஒரு உயிராக கூட மதிக்கவில்லை. பாஜகவினர் தேச ஒற்றுமையைப் பற்றி பேச தகுதியற்றவர்கள். நேர்மையற்றவர்கள் தான் மீண்டும் மீண்டும் தேச ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்கள்.

குஜராத் மாடல் போல், திராவிட மாடல் போல் நடைபயணம் என்பதும் ஒரு பழைய மாடல் தான். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை. அதேதான் அண்ணாமலைக்கும்" என கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman criticized BJP not qualified to talk about national unity


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->