மோடி முதலில் இதை செய்யவேண்டும்.. கொந்தளித்த சீமான்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நீட் விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகின்றது. குறிப்பாக சமீபத்தில் 3 மாணவர்களின் தற்கொலைக்கு பின்னர், இந்த பிரச்சனை வீரியம் அடைந்துள்ளது. பல்வேறு தரப்பினரும் நீட் தேர்வு வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆள்கிறவர்கள் எந்த கல்வி படித்தார்கள் என யாருக்கும் தெரியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "இந்த நாட்டை ஆட்சி செய்யபவர்கள், சட்டங்களை வகுப்பவர்கள் எந்த கல்வியை படித்து விட்டு வந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. 

மேலும், எந்த தேர்வு எழுதினார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. எம்பி, எம்.எல்.ஏ, அமைச்சர்கள் என்று எல்லாருக்கும் நுழைவுத்தேர்வு அல்லது நீட் போன்ற ஏதாவது ஒரு தேர்வை வைத்து எழுதி தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும்.

அதுபோல தேர்வு வைத்தால், நாட்டில் மிகத்தகுதியான அமைச்சர் பெருமக்கள் வருவார்கள் என்று தெரிவித்த சீமான் அதில் முதல் எக்ஸாமை பிரதமர் மோடியை எழுத வைக்க வேண்டும், அதன்பின்னர் கல்வித்துறை அமைச்சர் எழுத வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman speech about modi and neet exam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->