அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ்? மீண்டும் அதிமுக ஆட்சி? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவிக்கையில், "அதிமுக ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ரூ. 8,000 கோடி அளவிற்கு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது.

அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் நடக்கும் கொலைகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, மதுரையில் தொடர் கொலை நடைபெற்று வருவதால் நடைப்பயிற்சிக்கு செல்ல கூட மக்கள் அச்சப்படுகின்றனர். தமிழகத்தில் அரசியல் கட்சி நிர்வாகிகள், தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை" என்றார். 

மேலும், சசிகலா, ஓபிஎஸ் சுற்றுப்பயணம், அதிமுக ஒன்றிணையுமா? 2026-ல் அதிமுக எப்படி ஆட்சியை பிடிக்க போகிறது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, "2026-ல் அதிமுக எப்படி ஆட்சியை பிடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SellurKRaju AIADMK Madurai OPS Sasikala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->