பிச்சை, ஓசினு தான் பேசுவாங்க.. அமைச்சர் ஆனதே மக்கள் போட்ட பிச்சை தான்..!! - செல்லூர் ராஜூ, அதிமுக.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ வேலு "தென்னகத்தில் இருக்கும் அத்தனை மாவட்ட மக்களும் உயர் நீதிமன்றத்திற்கு சென்னை தான் வர வேண்டும். அவ்வாறு வந்தால் வழக்கறிஞர்களை சந்தித்து வழக்கு நடத்த 3 முதல் 4 நாட்கள் ஆகும்.

இந்த சூழலில் மத்திய அரசோடு தனது எண்ணத்தை எடுத்துக் கூறி, பலமுறை நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச வைத்து தென் மாவட்டங்களில் இருப்பவர்கள் தங்கள் பொருளாதாரத்தை விரயம் செய்யாமல் இருக்க இன்று மதுரைக்கு உயர் நீதிமன்றத்தின் கிளை வந்தது என்றால் தலைவர் கலைஞர் என்கின்ற பெருமாள் போட்ட பிச்சை தான்" என பேசி இருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் ஏ.வ வேலு தனது வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த அவர் "இதுபோன்று பேசுவது அமைச்சருக்கு அழகல்ல. தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையிலும், வழக்குகள் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டும் மதுரை மாவட்டத்தில் உயர் நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது. அதனை முதலமைச்சராக இருந்த யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அதை இன்று பிச்சை என்று சொல்வது திமுக அமைச்சர்களுக்கு இருக்கக்கூடிய மோசமான பழக்கம். 

மக்கள் வரிப்பணத்தில் விலை இல்லாத பேருந்தில் செல்லும் பெண்களை ஓசி என கேவலமாக கூறுவது, இதுபோன்ற பிச்சை என சொல்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மக்கள் போட்ட பிச்சையில் தான் இவர்கள் அமைச்சராகவும், ஆளுங்கட்சியாகவும் உள்ளனர்" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SellurRaju comment on minister Eve velu statement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->