டெல்லியில் செங்கோட்டையன்! பதில் சொல்ல மறுத்த எடப்பாடி பழனிச்சாமி!
Sengottaiyan Edappadi Palaniswami ADMK nirmala Sitharaman meet Amitshah BJP
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த புதன்கிழமை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 2 மணிநேரத்துக்கு மேலாக நடந்த சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் தன்னை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பாக எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்று கூறினார்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியாகியது. அவரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்பாகவே செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும், அவர் முன்னதாகவே மத்திய அமைச்சர்களை சந்திக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், செங்கோட்டையனின் டெல்லி பயணத்தைப் பற்றி கேள்வி எழுப்பியபோது, எடப்பாடி பழனிசாமி இதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
English Summary
Sengottaiyan Edappadi Palaniswami ADMK nirmala Sitharaman meet Amitshah BJP