மீண்டும் டெல்லி சென்றுள்ள செங்கோட்டையன்; 'அனைத்தும் நன்மைக்கே' என பதில்..!
Sengottaiyan has gone to Delhi again
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் செங்கோட்டையன். இவர் கடந்த 28-ஆம் தேதி டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அனால் இவர்களின் சந்திப்பு குறித்தும், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது இதுவரை செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்வில்லை. இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அவர்கள் பேசி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக செங்கோட்டையனுக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், செங்கோட்டையன் இன்று மீண்டும் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, டெல்லி போறீங்களா தொடர்ச்சியாக மவுனமாகவே இருக்க காரணம் என்ன? என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு அவர் 'மவுனம் அனைத்தும் நன்மைக்கே' என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். அத்துடன், அவர் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
Sengottaiyan has gone to Delhi again