செல்வப்பெருந்தகையால் கடுப்பான செங்கோட்டையன்; சட்டசபையில் ஆவேசமாக கத்தி பரபரப்பு..!
Sengottaiyan shouted angrily in the Tamil Nadu Assembly
இன்று தமிழக சட்டமன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தியுள்ளார். இது சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டசபையில் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உரையாற்றிக் கொண்டிருந்த போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் விதமாக எழுந்து பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதாவை விமர்சிக்கும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா? என்று அதிமுக எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தியுள்ளார்.
அப்போது, சுதாரித்துக்கொண்ட அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து செல்வப்பெருந்தகை பேச்சுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவை குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை பேசிய விஷயங்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.

ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
English Summary
Sengottaiyan shouted angrily in the Tamil Nadu Assembly