செந்தில்பாலாஜிக்கு ஜாமின்? முடிந்தது விசாரணை! தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணை முடிந்து கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.

திடீர்திருப்பமாக செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்குகளை அமலாக்கத் துறை சார்ந்திருக்கப் போகிறதா? இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை அமலாக்கத் துறை கைவிடப்போகிறதா? என்று விளக்கம் கேட்டு தெரிவிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று காலை முதல் வழக்காக விசாரணைக்கு வரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் வரத் தாமதமாகும் எனக்கூறி, வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்க்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என்றும், இன்று இறுதி நாள் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சற்றுமுன் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கதுறையின் பதில்கள் கொண்ட குறிப்பை பதிவு செய்த உச்சநீதிமன்றம், தற்போது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. 

செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் உள்ள மூன்று வழக்குகளையும் விசாரிக்கிறீர்களா? என்ற உச்சநீதிமன்ற கேள்விக்கு அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. 

இந்த பதிலை குறித்து வைத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேடி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji Bail Case SC Judgement soon


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->