செந்தில் பாலாஜிக்கு நாளை ஜாமின்? வெளியான செய்தியால் உற்சாகத்தில் உடன்பிறப்புகள்! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் நாளை (ஆகஸ்ட் 14) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும்செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், நேற்று இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊழல் வழக்கில் விசாரணை முடியாமல் அமலகத்துறை வழக்கு விசாரித்து தண்டிக்க சட்ட அனுமதிக்கிறதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டால் பணமோசடி வழக்கு என்னவாகும்? செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்க்கு அமலாக்கத்துறை தரப்பில், வாய்தா கேக்காவிட்டால் மூன்று மாதங்கள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. செந்தில்பாலாஜி தரப்பில், டெல்லி முன்னாள் துணை முதல்வருக்கு ஜாமின் வழங்கியது போல், செந்தில்பாலாஜிக்கு வழங்கலாம். அவர் எங்கும் தப்பி ஓடிவிட மாட்டார் என்று வாதம் வைக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. அவருக்கு நிச்சயம் ஜாமின் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இப்போதே திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji Bail case Supreme Court judgement date


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->