செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கு: மத்திய அரசுக்கு வார்னிங் கொடுத்த உச்சநீதிமன்றம்!
SenthilBalaji Bail case Supreme Court today
சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும்செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணை முடிந்து கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.
திடீர்திருப்பமாக செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்குகளை அமலாக்கத் துறை சார்ந்திருக்கப் போகிறதா? இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை அமலாக்கத் துறை கைவிடப்போகிறதா? என்று விளக்கம் கேட்டு தெரிவிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 20 ஆம் தேதி (இன்று) காலை முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் வரத் தாமதமாகும் எனக்கூறி, வழக்கை இன்றைய நாள் இறுதியில் தள்ளிவைக்கக் கோரிய மத்திய அரசுக்கு, இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என்றும், இன்று இறுதி நாள் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
English Summary
SenthilBalaji Bail case Supreme Court today