சனாதனம் வேரோடு அழிக்கக்கூடிய விஷயம்! - செந்தில்குமார் தர்மபுரி எம்.பி.!
SenthilKumar said that Sanatana Dharma should be eradicated
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதான தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், இந்தியாவிற்கு பாரதம் என பெயர் மாற்றம் செய்ய பாஜக முயற்சி செய்வதாகவும் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சனாதனம் தர்மம் குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். எய்ட்ஸ், தொழுநோய் போன்று சனாதனமும் அருவெறுக்கத்தக்க ஒன்று என கூறியிருந்தார். ஆ ராசாவின் இத்தகைய பேச்சுக்கு எதிராக மத கலவரத்தை தூண்டுவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சனாதன தர்மம் குறித்து திமுக தரப்பு வைக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல விஷயங்களில் புரிதல் கிடையாது. அதனால் தான் உளறிக்கொண்டு வருகிறார். சனாதன தர்மத்தை வேரோடு அழிக்கக்கூடிய விஷயம். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்தியா கூட்டணியை கண்டு பயந்து தான் பாஜகவினர் இந்தியாவிற்கு பாரத் என பெயரை மாற்ற பார்க்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
English Summary
SenthilKumar said that Sanatana Dharma should be eradicated