அண்டை நாடுகளிடம் இருந்து தீவிர தாக்குதல்!...ராணுவம் முழு அளவில் தயாராக இருக்க வேண்டும் - மத்தியமைச்சர் ராஜ்நாத் சிங் பரபரப்பு பேச்சு!
Serious attack from neighboring countries army should be fully prepared union minister rajnath singh sensational speech
நாடு முழுவதும் இன்று விஜய தசமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மேற்கு வங்காள மாநிலம், டார்ஜிலிங் நகரில் உள்ள சுக்னா கன்டோன்மென்டில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் விஜய தசமியை கொண்டாடினார்.
பின்னர் அவர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எந்த சூழலையும் எதிர்கொள்ள எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும், அதுவே தற்போது தேவையான ஒன்றாக உள்ளதாக தெரிவித்த அவர், நாம் தொடர்ந்து உஷாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், வெறுப்புணர்வுடனோ அல்லது ஏளனத்துடனோ எந்தவொரு நாட்டின் மீதும் நாம் ஒருபோதும் போர் தொடுத்ததில்லை என்றும், இதுவே மரபுரிமையாக நம்மிடம் உள்ள மதிப்பு என்று கூறிய அவர், மாறாக நம் நலன்களுக்கு எந்தவித அச்சுறுத்தலாவது ஏற்பட்டால், எந்தவொரு பெரிய நடவடிக்கையையும் எடுக்க நாம் தயங்கமாட்டோம் என்று நான் தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன் என்றும், இதுவே நாட்டுக்கு நான் அளிக்கும் உறுதியாகும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்டை நாடுகளிடம் இருந்து எந்தவித தீவிர தாக்குதலும் நடக்காது என்று நாம் புறந்தள்ளி விடமுடியாது என்று நடப்பு சூழலை குறிப்பிட்ட அவர், நாம் முழு அளவில் தயாராக இருக்கிறோம் என்பதை ஆயுத படைகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
English Summary
Serious attack from neighboring countries army should be fully prepared union minister rajnath singh sensational speech