தூத்துக்குடி || முகவரி கேட்டபோது வாக்குவாதம்.. ஆத்திரத்தில் சமரசம் செய்தவருக்கு நேர்ந்த கொடூரம்..!
two peoples arrested for attack man in thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி சாதரக்கோன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சிவன் மகன் கோவிந்தன். இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் முகவரி கேட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து முகவரி கேட்ட வாலிபரை கோவிந்தன் சத்தம் போட்டு விரட்டியடித்துள்ளார். இதையடுத்து, அந்த வாலிபர் தனது உறவினர்கள், நண்பர்கள் என்று சுமார் 20-க்கும் மேற்பட்டோருடன் கோவிந்தனின் வீட்டுக்கு சென்றபோது கோவிந்தன் வீட்டில் இல்லாததனால், அவர்கள் திரும்பி சென்றனர்.
இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் உறவினருடன் நேற்று காலையில் மீண்டும் சாதரக்கோன்விளைக்கு வந்தபோது சாதரக்கோன்விளையைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டனை சமரசம் பேசுவதற்காக அழைத்து வந்தனர். அதன் படி அவர் கோவிந்தன் மற்றும் அவருடைய தந்தையை வரவழைத்து சமரசம் பேசினார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், சிவனை தாக்கியுள்ளார். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த கோவிந்தன் அரிவாளை எடுத்து வந்து மணிகண்டனை வெட்டியுள்ளார். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதையடுத்து கோவிந்தன், சிவன் ஆகியோர் குலசேகரன்பட்டினம் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர்.
English Summary
two peoples arrested for attack man in thoothukudi