ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!....8 கி.மீட்டருக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்! - Seithipunal
Seithipunal


தீபாவளியை முன்னிட்டு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகளால் 8 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில்  கடந்த வாரம் ஊட்டி, கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும்,  இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் உதகையில் பல்வேறு சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கி உள்ளனர். உதகை தாவரவியல் பூங்கா, படகு சவாரி என அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகள் அலோமோதுகின்றனர்.
இதனால் உதகை- கூடலூர் தேசிய நெடுஞ்சசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தலைக்குண்டா முதல் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் வரை என 8 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.  இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tourists invading ooty vehicles lined up for 8 km


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->