உளுந்தூர்பேட்டை அருகே சோகம்!...பூ வியாபாரி மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!
Tragedy near ulundurpet flower seller got caught in electric fence and died miserably
உளுந்தூர்பேட்டை அருகே பூ பறிக்க சென்ற பூ வியாபாரி, வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியை சேந்தவர் சரத்குமார். இவர் பூ வியாபாரம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், கிளியூர் பகுதியில் பூக்களை பறிப்பதற்காக பூ வியாபாரி சரத்குமார் சென்றுள்ளார்.
அப்போது வயலில் பூ பறிக்கச் சென்றபோது வனவிலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி அவர் பரிதமாக உயிரிழந்தார். 27 வயதான இவர் பூ பறிக்க சென்ற போது உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இதற்கிடையே, அனுமதியின்றி வயலில் மின்வேலி அமைத்த கிளியானந்தன் என்பவரை திருநாவலூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் திருநாவலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே பூ பறிக்க சென்ற பூ வியாபாரி, வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy near ulundurpet flower seller got caught in electric fence and died miserably