கட்சிக்கு உரிமை கோரும் விவகாரம் : உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!
shivsena case sc order aug
சிவசேனா கட்சிக்கு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே உரிமைக் கோரும் விவகாரத்தில் மகாராஷ்டிர அரசியல் குழப்ப வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து ஆகஸ்ட் 8-ம் தேதி நீதிமன்றம் முடிவு எடுக்கப்படும் என்று, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவசேனாவில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனை அடுத்து பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானார்.
இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் எழுந்துள்ள அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பான பிரச்னைகள் குறித்து, சிவசேனா அதிருப்தி அணியினா் தங்களது பதில்களை மாற்றி அமைத்து தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
shivsena case sc order aug