திடுக்கிடும் தகவல்!...மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் : வாகன சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் இதோ! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 99 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, அங்கு அரசியல் கட்சியினரிடையே தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது.

மேலும், பல்வேறு அரசியல் கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்பதிலும், தொகுதி பங்கீட்டினை முடிவு செய்யும் பணிகளிலும்  தீவிரமாக இறங்கி உள்ளனர்.

தொடர்ந்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மற்றொரு பக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், அங்கு  கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் ஆணைய செயலி மூலம் 1,144 தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shocking information maharashtra assembly election here is the shocking information revealed in the vehicle inspection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->