பதவி விலகும் சித்தராமையா?....உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம், மைசூருவில் கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின்  போது மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய அவுட்டில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதலமைச்சர்  சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில்  மனு மீதான தீர்ப்பு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  வழங்கப்பட்டுள்ளது. அதில், சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம்,  தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர்.
இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சித்தராமையா தொடர்ந்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து அதில் வரும் முடிவுகளின்  அடிப்படையில் பதவி விலகுவாரா என்பது குறித்து பின்னர் தெரிய வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah resigns High Court action decision


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->