5 ஆண்டுகளுக்கு "நான் மட்டுமே" முதலமைச்சர்!! காங்கிரஸ் கட்சியில் புது பூகம்பம்!!
Siddaramaiah said he will be Karnatakacm for 5years
கர்நாடக மாநில பொது தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்துள்ளது. முதல்வர் வேட்பாளர் போட்டியில் முன்னாள் முதலமைச்சர் சித்தரமையாவும் டி.கே சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரு அணிகளாக பிரிந்து சித்தராமையாவுக்கு ஒரு தரப்பினரும், டி.கே. சிவக்குமார் ஒரு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். தேசிய காங்கிரஸ் தலைமை தலையீட்டை அடுத்து அம்மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் கர்நாடக மாநில முதலமைச்சராக 5 ஆண்டுகள் நானே நீடிப்பேன் என சித்தராமையா கூறியிருப்பது அம்மாநில காங்கிரஸ் கட்சியில் புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது. டி.கே சிவகுமாரும், சித்ராமய்யாவும் தலா 2 1/2 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகிப்பார்கள் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் சித்தராமையாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே டீ கே சிவகுமார் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆதரவளிக்க தயார் என மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே முதலமைச்சர் பொறுப்பை ஏற்குமாறு மேலிடம் தன்னை கேட்டுக்கொண்டால் சம்மதம் தெரிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடகா அமைச்சர் தினேஷ் குண்டுராவ் முதலமைச்சர் ஒருவர் இருக்கும்போது அந்தப் பதவியை பற்றி பேசுவது நாகரிகம் அல்ல என விமர்சனம் செய்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து யாரும் பேசக்கூடாது என காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
English Summary
Siddaramaiah said he will be Karnatakacm for 5years