கர்நாடக முதல்வராகிறார் சித்திராமையா.. டி.கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில சட்டமன்ற பொது தேர்தல் நிறைவு பெற்று முடிந்த நிலையில் தனி பெரும்பான்மையுடன் 135 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியில் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி கடந்த நான்கு நாட்களாக நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமாருக்கும் இடையே நேரடி போட்டியின் நிலவி வந்தது.

நேற்று காலை டெல்லி புறப்படுவதற்கு முன்பு பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே சிவகுமார் "காங்கிரஸ் எம்எல்ஏக்களை நான் உடைக்க விரும்பவில்லை. யார் முதுகிலும் நான் குத்த மாட்டேன்" என பேசி இருந்தார். 

இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று அடைந்த டி.கே சிவகுமார் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். அதேபோன்று முன்னாள் முதல்வர் சித்தராமய்யாவும் மல்லிகார்ஜுன் கார்கேவை சந்தித்து பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநில முதலமைச்சராக முதல் 30 மாதங்களுக்கு சித்தராமையாவும், அடுத்த 30 மாதங்களுக்கு டி.கே சிவகுமார் முதலமைச்சராகவும் தொடர காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டி.கே சிவகுமாருக்கு தற்பொழுது துணை முதல்வர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு வெளியாக உள்ளது.

மேலும் சித்தராமையா தனது ஆதரவாளர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அவருடைய ஆதரவாளர்கள் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நாளை பதவியேற்பு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு அறிவிக்கப்பட்டால் பதவியேற்பு விழா தள்ளி போக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiyaa becomes Karnataka Chief Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->