நடிகன் சித்தார்த் மீது டிஜிபி அலுவலகத்தில் தேசிய மகளீர் ஆணையம் புகார்.!
Siddharth issue Saina Nehwal
பிரதமர் நரேந்திர மோடி மோடியின் பஞ்சாப் மாநில பயணத்தின் போது, அவருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து, நாட்டின் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவின் தேசிய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில், "அராஜகவாதிகளின் சம்பந்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது" என்று தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.
தேசிய பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் பதிவிட்ட இந்த பதிவை ரீடுவிட் செய்த நடிகன் சித்தார்த், ஆபாசமான வார்த்தையை குறிக்கும் விதமாகவும், இரட்டை அர்த்தத்தில் தேசிய வீராங்கனை என்று கூட பார்க்காமல் அசிங்கப் படுத்தும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து, நாட்டின் வீராங்கனை என்ற அடிப்படையில் கூட ஒருவர் தனது கருத்தை தெரிவிக்க கூடாது., அதை நீ எப்படி தெரிவிக்கலாம்., இது உனக்கு அவமானகரமான ஒரு விஷயம் என்று நடிகர் சித்தார்த் தெரிவித்திது இருப்பதற்கு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, மகாராஷ்டிர மாநில டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ளது. மேலும் அவருடைய ட்விட்டர் அக்கவுண்ட் முடக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளது.
English Summary
Siddharth issue Saina Nehwal