எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற அடுத்த நாளில் ராஜினாமா: அதிரவைத்த முதலமைச்சர் மனைவி.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. அதில் ஒன்றான சிக்கிம் சட்டசபை தேர்தலில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமங் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

இதேபோல், முதலமைச்சரின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் வெற்றிபெற்ற இவர் நேற்று சட்டசபையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்.

இந்த நிலையில், கிருஷ்ண குமாரி ராய் இன்று திடீரென எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகி உள்ளது. கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமாவை சபாநாயகர் ஷேர்பா ஏற்றுக்கொண்டதாக, சட்டசபை செயலாளர் லலித் குமார் குரங் தெரிவித்தார்.

முதலமைச்சர் பிரேம் சிங் தமங் அருணாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் பிமா காண்டு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள நேரத்தில், அவரது மனைவியின் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sikkim mla krishnakumari rai resighn posting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->