தமிழக அரசு பள்ளி ஆசிரியை தாக்கியதில், சிறுமி மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


சிங்கம்புணரி அருகே அரசு பள்ளியில் பயின்று வந்த நான்காம் வகுப்பு சிறுமியை, ஆசிரியை அடித்ததாக கூறப்பட்ட சம்பவத்தில், பள்ளியை முற்றுகையிட்டு சிறுமியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அடுத்த அரசு பள்ளியில், ஜெயபாரதி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், வீட்டுப்பாடம் எழுதாத நான்காம் வகுப்பு சிறுமியின் கையில் ஆசிரியை ஜெயபாரதி குச்சியால் அடித்ததாக சொல்லப்படுகிறது.

ஆசிரியையின் தண்டனையால் கையில் காயம் அடைந்த சிறுமி, சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. 

இதற்கிடையே சிறுமி மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singampunari govt school student attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->